நாயகியாக புரமோஷன் ஆன அஜித்தின் ரீல் மகள்!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

தல அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி அனிகா சுரேந்திரன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்து, நாயகியாக புரமோஷன் ஆக முயற்சித்து வந்தார். அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது

அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் கப்பேல்ல. அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முகமது முஸ்தபா இயக்கியிருந்தார்

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதும் மலையாளத்தில் இயக்கிய முகம்மது முஸ்தபா தெலுங்கிலும் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அன்னாபென் நடித்த முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

குழந்தை நட்சத்திரத்திலிருந்து தெலுங்கு திரையுலகில் நாயகியாக புரமோஷன் பெற்றுள்ள அனிகா, விரைவில் தமிழிலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

இந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறந்த போட்டியாளர்களும் மோசமான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சிறந்த போட்டியாளர்கள் அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டியில்

'டேய் லூசுத்தம்பி': சீண்டிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய குஷ்பு!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த குஷ்புவை காங்கிரஸ் கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும், அவ்வப்போது தன்னை நேரடியாக சீண்டி விமர்சனம்

பாலா மீது அன்பா? காதலா? நெற்றி பொட்டில் அடித்த ஆரி!

பிக்பாஸ் 4வது சீசனில் உள்ள ஒரே காதல் ஜோடி என பாலாஜி-ஷிவானி இருந்து வரும் நிலையில் இந்த காதல் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய விஷயத்தை ஆரி கன்பக்சன் அறையிலும் சக போட்டியாளர்களிடமும் கூறியுள்ளார்.

போலீசார் தாக்கியதால் அவர்கள் முன்னிலையிலேயே தீக்குளித்து பெண் தற்கொலை…பதற வைக்கும் சம்பவம்!!!

நெல்லை மாவட்டத்தில் தன்னைத் தாக்கிய போலீசார் முன்னிலையிலேயே 45 வயதான பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் உயிரிழந்த பரிதாபம்!!!

துபாய் ஒட்டியுள்ள புறநகர் பாலைவனப் பகுதிகளில் ஆதரவற்று பல ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.