விஜய் இதை சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்: 'லியோ' படப்பிடிப்பில் நடந்ததை கூறிய பாபு ஆண்டனி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் நீண்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய்தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தவர்களில் ஒருவர் பிரபல வில்லன் நடிகர் பாபு ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. ’பூவிழி வாசலிலே’ ’மக்கள் என் பக்கம்’ ’பேர் சொல்லும் பிள்ளை’ ’மைடியர் லிசா’ ‘அஞ்சலி’ போன்ற 80கள், 90கள் படங்களில் நடித்த பாபு ஆண்டனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ’காஞ்சனா’ ‘அடங்கமறு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது ‘லியோ’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பாபு ஆண்டனி காஷ்மீர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் தான் பேசிக் கொண்டிருக்கும் போது அவரை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் அவர் மிகவும் அடக்கமாகவும் அன்பாகவும் இருந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும் தான் நடித்த ’பூவிழி வாசலிலே’ ’சூரியன்’ ’விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற படங்களை அவர் பார்த்திருந்ததாகவும் அதனால் நான் உங்களுடைய ரசிகன் என்று அவர் கூறியதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் கூறினார். அவரிடமிருந்து இப்படி ஒரு அன்பான வார்த்தைகள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்த அவர் தன்னுடைய ரசிகன் என்று கூறிய அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாக கூறினார்.
மேலும் லோகேஷ் கனகராஜின் இந்த யூனிட் யூனிட்டில் நானும் ஒரு நபராக இருப்பதில் எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார். அவருடைய எந்த பதிவு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments