2022இல் இந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து… பீதியைக் கிளப்பும் எதிர்கால கணிப்புகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்களின் சில கருத்துகள் எப்போதும் மக்கள் மத்தியில் ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் பல விஷயங்களைக் கணித்துக் கூறியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பாபா வங்கா. கடந்த 1996 இல் இறந்துபோன இவர் கணித்துள்ள பல கணிப்புகள் உண்மையில் நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவைப் பற்றி பாபா வங்கா கூறியுள்ள சில கருத்துகள் தற்போது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. அதாவது வரும் 2022 இல் இந்தியாவில் வெப்பநிலை 50% உயரும் என்று கூறியுள்ள பாபா வங்கா இதனால் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரித்து விவசாயம் பாதிக்கப்படும் எனவும் தொடர்ந்து வறுமை தலைவிரித்தாடும் எனவும் கூறியுள்ளார்.
இதைத்தவிர ஒட்டுமொத்த உலகத்திலும் அடுத்த ஆண்டில் ஆங்காங்கே வெப்பநிலை அதிகரித்து இதனால் நிலநடுக்கங்களும் தொடர்ந்து சுனாமி ஏற்படுபவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பல ஆயிரம் ஆண்டுகளாக மறைந்துள்ள புதிய வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள் என்று கூறிய இவர் இதைவிட முக்கியமாக பூமிக்கு ஏலியன்கள் வருவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஒமு அமூவா எனப்படும் கிரகத்தில் இருந்து ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள் என்றும் பாபா வங்கா கணித்து இருப்பது கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒமு அமூவா எனும் கிரகமானது கடந்த 2017 இல் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்படாமல் தானாகவே பூமிக்கு அருகில் வந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். தற்போது பாபா வங்காவும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பது பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயதில் மின்னல் தாக்கியதில் சிக்கி தனது கண் பார்வையை இழந்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாபா பல எதிர்கால விஷயங்களை கணித்துக் கூறியதால் அந்நாட்டில் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து பாபா வங்கா கூறிய அனைத்து விஷயங்களும் பதிவுசெய்து வைப்பட்டு உள்ளன.
இதற்கு முன்பு தாலிபான்கள், அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை கடந்த 2011 செப்டம்பர் மாதத்தில் தகர்த்தனர். இதையும் பாபா வங்கா கணித்திருந்தார். மேலும் 2014 தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமி, ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமி, போன்றவற்றையும் கணித்திருக்கிறார். ஒபமா அமெரிக்காவில் ஆட்சியமைப்பார் என்பது சோவியத் ரஷ்யா உடையும் என்பது போன்ற விஷயங்களையும் பாபா வங்கா கணித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் எனக்கூறியுள்ள பாபா வங்கா தொடர்ந்து பல்வேறு கணிப்புகளை கூறியுள்ளார். அதில் பெரும்பாலான கணிப்புகள் நடந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் வெப்பநிலை அதிகரிக்கும் இதனால் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரிக்கும் தொடர்ந்து வறுமை ஏற்படும் எனக் கூறியிருப்பது தற்போது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments