'குக் வித் கோமாளி' பாபா பாஸ்கர் மகள் சடங்கு நிகழ்ச்சி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ என்ற படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமான பாபா பாஸ்கர் அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பதும், விரைவில் வெளியாக போகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்றும் ஜிவி பிரகாஷ் நடித்த ’குப்பத்து ராஜா’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளர் என்பதும் தெரிந்ததே.

ஆனால் இவை அனைத்திலும் பெறாத பிரபலத்தை அவர் ‘குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் பெற்று விட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய எனர்ஜியை பார்த்து அனைவரும் ரசித்தனர் என்பதும் அந்த செட்டையே அவர் கலகலப்பாக வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாபா பாஸ்கர் மகள் சடங்கு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.