பாட்ஷா 2 வதந்தி உண்மையாக வேண்டும் என ஆசை. சுரேஷ்கிருஷ்ணா

  • IndiaGlitz, [Wednesday,July 22 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' படத்தின் இரண்டாவது பாகத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவே இயக்கவுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து இன்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


'பாட்ஷா' படத்தின் இரண்டாவது பாகத்திற்கு நான் தயாராகி வருவதாகவும், அந்த படத்திற்காக நான் அஜீத்தை அணுகியதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் வெறும் வதந்திதான். ஆனால் இந்த வதந்தி உண்மையாக வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அந்த சந்தர்ப்பத்திற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன்' என்று கூறியுள்ளார்.

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்ததால், பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திலும் அஜீத் நடிக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தனக்கு மகிழ்ச்சி என சுரேஷ்கிருஷ்ணாவும் தற்போது கூறியுள்ளதால் அஜீத்தின் சம்மதம் ஒன்று மட்டுமே தற்போது தேவைப்படுகிறது. அஜீத் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.