திரையுலகில் அறிமுகமாகும் 'பாட்ஷா' பட நடிகரின் வாரிசு

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

தமிழ் திரையுலகில் மட்டுமன்றி இந்திய திரையுலகில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’பாட்ஷா’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்த நடிகர் ஒருவரின் வாரிசு தற்போது தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினியின் சகோதரராக போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பவர் சஷிகுமார். இவருடைய மகன் அக்‌ஷித் தான் தற்போது திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ள இந்த திரைப்படத்திற்கு ’சீதாயானம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அக்‌ஷித் ஜோடியாக அனஹிதா பூஷன் என்பவர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வித்யூ ராமன், விக்ரம் சர்மா, சுதர்சன் உள்பட பலர் நடிக்கின்றனர் இந்த படத்தை பிரபாகர் என்பவர் இயக்கி வருகிறார்.

பிரபல கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமார் அவர்களின் மகன் பத்மநாபன் பரத்வாஜ் தான் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்காக ஏற்கனவே அவர் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

குடும்ப சென்டிமென்ட் கலந்த காதல் கதையான இந்த படத்தின் மூலம் நடிகரின் சஷிகுமார் மகன் அறிமுகமாவதால், அவர் தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாங்காக் மங்களூர் ஹைதராபாத் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளதாகவும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.