close
Choose your channels

20 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் 'பாட்ஷா' பட நடிகர்.. மகன் தான் ஹீரோ..!

Wednesday, September 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி திரைப்படமான ‘பாட்ஷா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினியின் நண்பராக சரண்ராஜ் நடித்திருப்பார் என்பதும் அவரது பாட்ஷா கேரக்டரை தான் தன்னுடைய பெயராக மாற்றிக்கொள்ள ரஜினி மாற்றிக்கொள்வார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் சரண்ராஜ் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்

நடிகர் சரண்ராஜ் ஏற்கனவே கடந்த 1999 ஆம் ஆண்டு ’அண்ணன் தங்கச்சி’ என்ற படத்தை இயக்கிய நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்

’குப்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதை திரைக்கதை வசனம் எழுதி சரண்ராஜ் இயக்க இருக்கும் நிலையில் அவருடைய மகன் தேவ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர். இந்த படத்தை சோனி ஸ்ரீ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது

ஒரு மீனவை இளைஞர் மார்வாடி பெண்ணை காதலிப்பதால் ஏற்படும் பிரச்சனை தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. சரண்ராஜின் மகன் மீனவ இளைஞராக நடிக்க இருப்பதாகவும், சரண்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான போட்டோஷூட் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment