அஜித்துக்கு வாழ்த்து கூறிய பாகுபலி நடிகர்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் ஆச்சரியம் அடைந்து அஜித்துக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அஜித்துடன் இணைந்து 'ஆரம்பம்' படத்தில் நடித்தவரும் 'பாகுபலி' படத்தின் வில்லன் நடிகருமான ராணா தற்போது 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸானதுமே போன் செய்து அஜித்துக்கு வாழ்த்து கூறினேன். அஜித் செம ஹேப்பி. போஸ்டரில் அவருடைய ஃபிட்னெஸை பார்த்ததுமே அவருடன் நான் உடற்பயிற்சி செய்த ஞாபகங்கள்தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு இருந்த காயங்கள், உடல்நிலை எல்லாத்தையும் தாண்டி, இந்த அளவுக்கு ஃபிட்டா இருக்கிறதெல்லாம் சவாலான விஷயம்' என்று ராணா கூறியுள்ளார்.