செப்டம்பர் 15-ல் பாகுபலி 2-ஆம் பாகம் தொடக்கம்

  • IndiaGlitz, [Friday,July 24 2015]

இந்திய திரையுலகில் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, தென்னிந்தியாவின் மிக அதிக வசூலை பெற்று சாதனை செய்துள்ள 'பாகுபலி' படம், ரூ.400 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டுள்ளது. மேலும் இந்த படம் விரைவில் சீன, ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யவுள்ளதால், படத்தின் வசூல் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அனைவரும் விடுமுறையை கழித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15முதல் தொடங்கும் என எஸ்.எஸ்.ராஜமவுலி தரப்பில் கூறப்படுகிறது. அதற்குள் விடுமுறைக்கு சென்றவர்கள் அனைவரும் திரும்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் 40% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் போர்க்காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்புகளும், பாடல்காட்சிகளும் மட்டுமே படமாக்கப்படவேண்டிய நிலை இருப்பதாகவும், இந்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு 2016ல் திட்டமிட்டபடி இந்த படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் இறுதியில் சத்யராஜ் பேசும் சஸ்பென்ஸ் வசனத்துடன் படம் முடிந்துள்ளதால், முதல் பாகத்தை பார்த்த அனைவரும் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தையும் பார்ப்பார்கள். என்பது உறுதியாகிறது.