'பாகுபலி 2' ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Tuesday,October 25 2016]

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் பரபரப்பை இணையதளங்களில் ஏற்படுத்தியது என்பதை அறிவோம்.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை இதுவரை கேள்விப்பட்டிராத மிகப்பெரிய தொகைக்கு லஹரி நிறுவனம் பெற்றுள்ளது. 'பாகுபலி' படத்தின் ஆடியோ உரிமையையும் இதே நிறுவனம்தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பல சூப்பர் ஹிட் வெற்றி பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் கீரவானியுடன் மீண்டும் இணைவதில் பெருமை அடைவதாக லஹரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.