'பாகுபலி' கிளைமாக்ஸில் திடீர் மாற்றம்?

  • IndiaGlitz, [Tuesday,July 14 2015]

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி இந்தியாவிலேயே முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த சாதனைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


இந்த படத்தின் பிரமாண்டம், பிரபாஸின் அற்புதமான நடிப்பு, கேமிராவின் மாயாஜாலம், தமன்னாவின் அழகு, பிரமிப்பூட்டும் பின்னணி இசை, கிராபிக்ஸ் காட்சிகளின் அற்புதம் ஆகிய பல பாசிட்டிவ் கருத்துக்கள் இந்த படம் குறித்து பேசப்பட்டு வந்தாலும், படத்தின் முடிவு இடைவேளையில் வரும் சஸ்பென்ஸ் காட்சி போல இருப்பதாகவும், சத்யராஜ் பேசும் ஒரு முக்கிய வசனத்துடன் படம் முடிவடைவது ஒரு முற்றுபெறாத படமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் உள்ள பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

எனவே இதுகுறித்து தனது குழுவினர்களுடன் ஆலோசனை செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அடுத்த பாகத்தில் இடம்பெறக்கூடிய ஒருசில முக்கிய காட்சிகளை டிரைலர் போன்று ஒரு முன்னோட்டத்தை காண்பிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த காட்சிகள் இன்றுமுதல் அனைத்து திரையரங்குகளிலும் இணைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'வாலு' தடை- சிம்புவுடன் பேசிய தனுஷ்

நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றமான செய்தி… அவர் நடித்த ’வாலு’ படம் ஜூலை 17 அன்று வெளியாகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். படம்...

'அஜீத் 56' படத்தின் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் முடிவடைந்து தற்போது...

'வாலு' படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை. ஜூலை 17-ல் ரீலீஸ் ஆவதில் சிக்கல்?

சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தடை செய்ய வேண்டும் என விநியோகிஸ்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்...

ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.....

கமலுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த மாதவன்

ஒருபக்கம் இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் குறுகிய கால தயாரிப்பும், மீடியம் பட்ஜெட் படமுமான 'பாபநாசம்' படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது. சிறப்பாக திரைக்கதை மற்றும் உலக நாயகனின் வித்தியாசமான நடிப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.....