நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. 'பாகுபலி 2' குறித்து கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் குறித்து பேசாத ஆளே இல்லை எனலாம். திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கிட்டத்தட்ட அனைத்து இந்திய திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை வானளவு பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று வாரமாக 'பாகுபலி 2' படம் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ள 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இடையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் 'பாகுபலி'. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர். படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.
'பாகுபலி' படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்.
இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com