'பாகுபலி' படத்தை முந்தியது விஜய்யின் 'புலி'
- IndiaGlitz, [Sunday,August 02 2015]
தற்கால படங்களில் நடிகர்களின் பங்கு ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவு முக்கியமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கியம் பெற்று வருகின்றன. அதுவும் தற்போது தென்னிந்திய படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஷாட்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
தென்னிந்திய படங்களை பொருத்தவரையில் இதுவரை வெளிவந்த படங்களில் நான் ஈ, மகதீரா, மற்றும் பாகுபலி ஆகிய படங்களில்தான் அதிகளவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
நான் ஈ படத்தில் 1200 கம்ப்யூட்டர் ஷாட்களும், மகதீரா படத்தில் 1600 கம்ப்யூட்டர் ஷாட்களும், சமீபத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 2000 கம்ப்யூட்டர் ஷாட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று படங்களையும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இளையதளபதியின் 'புலி' படத்தில் 2400 கம்ப்யூட்டர் ஷாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தென்னிந்திய படங்களில் 'புலி' படத்தின் சிஜி ஒர்க் தான் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.
பாகுபலி' படத்தை விட 400 ஷாட்கள் அதிகம் பெற்று முந்தியுள்ள 'புலி', ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்த பாகுபலியின் வசூலையும் முந்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.