உலக அளவில் 11வது இடத்தை பிடித்தது 'பாகுபலி 2'

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதை பார்த்தோம். இந்திய அளவில் அதிக நபர்கள் பார்த்த டிரைலர் என்ற சாதனையை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உலக அளவிலும் புதிய சாதனை செய்துள்ளது.

24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக பேர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பட்டியலில் 'பாகுபலி 2' டிரைலர் 11வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

மேலும் இந்த பட்டியலில் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்று 6வது இடத்தையும், ஷாருக்கானின் 'ராயீஸ்' திரைப்படம் 19வது இடத்தையும், அமீர்கானின் 'டங்கல்' திரைப்படம் 26வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் Fast and Furious படத்தின் 8ஆம் பாகத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 139 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

More News

ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சூர்யாவுக்கு விஜய் நன்றி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது 'சி 3' படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு தேதி

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சமந்தா-நாகசைதன்யா ஜோடி சேர வாய்ப்பில்லை. வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

பிரபல நடிகை சமந்தாவும், பிரபல நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்

ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் வரும் ஏப்ரம் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவும் தற்போது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.