இன்று இந்திய சினிமா சரித்திரத்தின் பொன்னாள்: 'பாகுபலி'யால் கிடைத்த கெளரவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
100 வருட இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு திரைப்படம், அதுவும் ஒரு தென்னிந்திய திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு முதல்முறையாக ரு.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த பெருமையை இந்திய சினிமாவுக்கு கொடுத்த படம் 'பாகுபலி 2'.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஐந்து வருட உழைப்பு, நான்கு வருடங்கள் வேறு படங்களில் ஒப்பந்தமாகாமல் இந்த படத்திற்காகவே செய்த பிரபாசின் அர்ப்பணிப்பு, மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஈடுபாடு ஆகியவையே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம். 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இன்று 10வது நாள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரூ.1000 கோடி வசூல் செய்திருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது.
இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த படத்தின் வெற்றியால் இன்னும் பல தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க முன்வருவார்கள் என்பதால் இந்த படம் இந்திய சினிமாவுக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று கூறினாலும் அது மிகையில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments