இன்று இந்திய சினிமா சரித்திரத்தின் பொன்னாள்: 'பாகுபலி'யால் கிடைத்த கெளரவம்

  • IndiaGlitz, [Sunday,May 07 2017]

100 வருட இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு திரைப்படம், அதுவும் ஒரு தென்னிந்திய திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு முதல்முறையாக ரு.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த பெருமையை இந்திய சினிமாவுக்கு கொடுத்த படம் 'பாகுபலி 2'.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஐந்து வருட உழைப்பு, நான்கு வருடங்கள் வேறு படங்களில் ஒப்பந்தமாகாமல் இந்த படத்திற்காகவே செய்த பிரபாசின் அர்ப்பணிப்பு, மற்றும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு ஈடுபாடு ஆகியவையே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம். 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இன்று 10வது நாள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரூ.1000 கோடி வசூல் செய்திருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது.

இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த படத்தின் வெற்றியால் இன்னும் பல தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க முன்வருவார்கள் என்பதால் இந்த படம் இந்திய சினிமாவுக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று கூறினாலும் அது மிகையில்லை.

More News

விஷால்-கார்த்திக் கூட்டணியில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா இயக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' திரைப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கிடைத்த சம்பள பணம் முழுவதையும் இருவரும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது...

ஏ.ஆர்.ரஹ்மானின் இயக்குனர் அனுபவம் குறித்த வீடியோ விருந்து

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முதன்முதலில் Le Mask என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அவர் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்...

அதிமுகவின் இரு அணி இணைப்பின் தாமதத்திற்கு காரணம் யார்? கருணாஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் 122 எம்.எல்.ஏக்களில் ஒருவரான நடிகர் கருணாஸ், அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றும் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகாலம் பூர்த்தி செய்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நிர்பயா தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்து ஒன்றில் ஆறு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணம் அடைந்தார்.

தமிழ், தெலுங்கை அடுத்து வங்க மொழியிலும் சாதனை புரிந்த ஜெயம் ரவி படம்

கடந்த 2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் 'தனி ஒருவன்.