'பாகுபலி 2' தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளின் சென்னை வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,May 15 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் உருவான 'பாகுபலி 2' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு திரைப்படம் ஏற்கனவே சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நல்ல லாபத்தை விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுகும் கொடுத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளும் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வசூல் சாதனை செய்துள்ளது.

'பாகுபலி 2' படத்தின் தெலுங்கு பதிப்பு சென்னையில் கடந்த வார இறுதியில் 11 திரையரங்க வளாகங்களில் 173 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.11,48,360 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பு 5 திரையரங்குகளில் 39 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,87,510 வசூல் செய்துள்ளது. இரண்டு மொழிகள் படத்திற்கு திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் மொத்த சென்னை வசூல் 1,43,53,670 என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படம் ஒன்று சென்னையில் அதிக வசூல் செய்தது இந்த படமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தின் இந்தி பதிப்பின் மொத்த வசூல் ரூ.29,31,710 ஆகும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வசூல் சாதனை செய்து வரும் இந்த படம் சென்னை பாக்ஸ் ஆபீசில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.