'பாகுபலி 2' படம் தான் கடைசி. விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக பெரிய நடிகர்களின் படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இனிமேல் பெரிய நடிகர்கள் அல்லது பெரிய பட்ஜெட் படங்களின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்காமல் பிரித்து பிரித்துதான் வாங்கப்படும் என்று விநியோகிஸ்தர்கள் சங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இதன் காரணமாக இனிமேல் பெரிய பட்ஜெட் படங்களின் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை என ஏரியாவாரியாக பிரித்து தான் வாங்க வேண்டும் என்றும் யாரும் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையை வாங்கக்கூடாது என்றும் ஒட்டுமொத்த விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் 28ஆம் தேதி வெளியாகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படமே ஒட்டுமொத்தமாக உரிமை பெற்ற கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இந்த அதிரடி முடிவால் பெரிய நடிகர்களின் படங்களின் விற்பனைக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதுவரை ஒட்டுமொத்த உரிமையை ஒருவரிடமே கொடுத்து மிகப்பெரிய தொகையை ஒரே நபரிடம் இருந்து தயாரிப்பாளர் பெற்று வந்தார். ஆனால் இனிமேல் ஒவ்வொரு ஏரியா விநியோகிஸ்தர்களிடம் பேரம் பேசி விற்பனை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பார்க்க வேண்டிய நிலை வரும். அதேபோல் பெரிய நடிகர்களின் படங்கள் நஷ்டம் ஆனால் மொத்த உரிமை பெற்ற ஒரே ஒரு விநியோகிஸ்தர்களுக்கு மட்டுமே இதுவரை நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இனிமேல் நஷ்டம் ஏற்பட்டால் ஒவ்வொரு ஏரியா விநியோகிஸ்தர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆயினும் இந்த அதிரடி முடிவால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த நிம்மதியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout