'பாகுபலி 2' படத்தில் எத்தனை கிளைமாக்ஸ்?

  • IndiaGlitz, [Saturday,August 27 2016]

பிரமாண்ட இயக்குனர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' என்ற மாபெரும் வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். முதல் பாகத்தை பார்த்த அனைவருமே கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினர்களுக்கு உள்ளது. ஏனெனில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
இந்நிலையில் 'பாகுபலி 2' படத்திற்காக நான்கு கிளைமாக்ஸ்களை ராஜமெளலி திட்டமிட்டு வைத்துள்ளாராம். பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பதும் அதற்கு பின்னர் வரும் காட்சிகளும் கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நான்கு கிளைமாக்ஸ்களில் இரண்டு கிளைமாக்ஸ்களை படப்பிடிப்பு செய்துவிட்டு அதன் பின்னர் ஒரு கிளைமாக்ஸை தேர்வு செய்து படத்தில் இணைக்க ராஜமெளலி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜமெளலி இறுதியாக செலக்ட் செய்த கிளைமாக்ஸ் என்ன என்பது வரும் 2017- ஏப்ரல் 28ஆம் தேதி தெரியவரும்.