'பாகுபலி 2' அதிகாலை காட்சி ரத்து ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் போலவே இந்த படமும் ஒருசில திரையரங்குகளில் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக KDM ரிலீஸ் செய்யவில்லை என்றும் அதன் காரணமாக அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இன்னும் ஒருசில மணித்துளிகளில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு காலை காட்சிகள் வழக்கம் போல திரையிடப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே தமிழக ரசிகர்கள் WKKB (Why Kattappa Killed Baahubali) என்னும் ரகசியத்தை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்வார்கள் என்பது உறுதி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com