close
Choose your channels

6500 திரையரங்குகளில் மீண்டும் பாகுபலி. ரூ.1000 கோடி வசூலை நெருங்குமா?

Tuesday, June 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகின் பல நாடுகளில் வசூலை குவித்த இந்த படம் மொத்தம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக சீனாவில் வெளியிட திட்டமிடப்பட்டு சீன மொழி டப்பிங் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது சீனாவில் 'பாகுபலி' படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இம்மாதம் 24ஆம் தேதி சீனாவில் இந்த படம் சுமார் 6500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரூ.600 கோடியை வசூல் செய்துவிட்ட இந்த படம் சீன வசூலை சேர்த்தால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்தின் கிளைமாக்ஸ் போர்க்காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல்தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment