ரிலீசுக்கு முன்பே அமீர்கான் பட சாதனையை உடைத்த 'பாகுபலி 2'
- IndiaGlitz, [Tuesday,April 11 2017]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 6500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படமும், இத்தனை தியேட்டர்களில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ரிலீசிலும் இந்த படம் சாதனை செய்துள்ளது. இதுவரை அமிர்கான் நடித்த 'டங்கல் திரைப்படம் வெளிநாடுகளில் 600 தியேட்டர்களில் வெளியானதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது அந்த சாதனையையும் பாகுபலி 2 திரைப்படம் முறியடித்துள்ளது.
பாகுபலி 2' திரைப்படம். ஆஸ்திரேலியாவில் 35 திரையரங்குகளிலும், ,நியூசிலாந்து மற்றும் ஃபிஜி தீவுகளில் 18 திரையரங்குகளிலும், வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் உலகம் முழுவதும் சுமார் 50 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் வெளியாக உள்ளது.
'பாகுபலி 2' படத்தின் இந்த உள்நாட்டு, வெளிநாட்டு சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.