பிரமாண்ட இயக்குனர்களின் 2வது இன்னிங்ஸ் இன்று ஆரம்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்றுடன் கார்த்திகை மாதம் முடிகிறது. நாளை முதல் மார்கழி பிறப்பதால் இன்று ஒருசில முக்கிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கவிழா நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்கள் என்று கருதப்படும் ஷங்கர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர்களின் எந்திரன் 2' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் இன்று முதல் படப்பிடிப்பை தொடக்குகின்றன. இருவருமே ஏற்கனவே தாங்கள் இயக்கிய படங்களின் இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கவிருக்கும் படங்கள் குறித்து ஒரு பார்வை:
எந்திரன் 2: ரஜினிகாந்த், ஷங்கர் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் படம். லைகா நிறுவனம் ரூ.250 கோடியில் பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது.
பாகுபலி 2: 'பாகுபலி'க்கு உலகம் முழுவதும் கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பின்னர் உருவாகும் படம். ஏற்கனவே முதல் பாகத்தின்போதே இந்த படத்தின் 40% பணிகள் முடிந்துவிட்டாலும் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக இன்று முதல் தொடங்குகிறது.
விக்ரம்-ஆனந்த்ஷங்கர் படம்: மர்ம மனிதன்' அல்லது 'மாரீசன்' என்று தலைப்பு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடக்கம் இன்று நடைபெறுகிறது.
மேலும் த்ரிஷயம் படத்தை இயக்கிய ஜீத்துஜோசப் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்த புதிய படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கின்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments