'அழகிய தமிழ்மகன்-2 படத்தில் விஜய்?

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

அட்லி இயக்கத்தில் தற்போது 59வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய், தனது அடுத்த படத்தை இயக்க யாருக்கு வாய்ப்பு அளிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

விஜய்யை இயக்க எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ராஜா, கே.வி.ஆனந்த், சசிகுமார், சமுத்திரக்கனி, போன்ற முன்னணி இயக்குனர்கள் தயார் நிலையில் இருக்க, விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பரதன் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்காக இயக்குனர் பரதன் ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்திருப்பதாகவும், விஜய்-பரதன் இணையும் இந்த படம் 'அழகிய தமிழ்மகன்' இரண்டாம் பாகமா? அல்லது இது புதிய கதையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

'வீரம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.