செப்டம்பர் 5: நாள் குறித்த அழகிரி

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டில் அக்கட்சி உள்ளது. வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக தலைவர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் கட்சி உடையாமல் இருக்க மீண்டும் மு.க.அழகிரி கட்சியில் சேர்த்து கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குரிய அறிகுறியே தற்போது தெரியவில்லை.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இந்த பேரணியின் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் பேரணி முடிந்தபின்னர் தனது ஆதங்கத்தையும் முக்கிய அறிவிப்பையும் தெரிவிப்பேன் என்றும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

செப்டம்பர் 5ஆம் தேதி அழகிரி நாள் குறித்துள்ளதால் அன்றைய தினம் அவருடைய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதே திமுகவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More News

மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கிய பாடகர்

கேரளாவை சேர்ந்த பிரபல பாடகர் உன்னிமேனன் தனது மகனின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸா?

இன்று விஜய்சேதுபதியின் 'மேற்குத்தொடர்ச்சிமலை', சத்யராஜின் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', பிரபுதேவாவின் 'லஷ்மி' மற்றும் கிருஷ்ணாவின் 'களரி'

பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை தொடங்கிய விஜயலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஓரளவுக்கு சுவாரஸ்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த வாரம் மகத் வெளியேறிவிட்டால்

மலையாள சேனல்களில் செய்தியாகிய விஜய் நிவாரண நிதி

கேரளா முழுவதும் சமீபத்தில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடரில் சிக்கியுள்ள அம்மாநில மக்களுக்கு தமிழ் திரையுலகினர் செய்து வரும் உதவிகள் பெரும் ஆறுதலாக உள்ளது.

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி ஜோடியாக 2 நடிகைகள்?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் என மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்த படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம்