close
Choose your channels

'அழகி' நடிகை நந்திதா தாஸை ஞாபகம் இருக்கிறதா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவான ’அழகி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நந்திதா தாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்த நந்திதா தாஸ் ’அழகி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கன்னத்தில் முத்தமிட்டால்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த அவர் கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா தாஸ் தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகை நந்திதா தாஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் ஆனால் இந்த ஜோடி ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதனை அடுத்து சுபோது மஸ்காரா என்பவரை நந்திதா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நந்திதாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.