எம்.எல்.ஏவின் அக்கா மகன் என அசீம் கூறியது பொய்யா? சாயத்தை வெளுக்கும் எம்.எல்.ஏ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராகிய அசீம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தமிழக எம்எல்ஏ ஒருவரின் அக்கா மகன், அதனால்தான் தன்னிடம் விக்ரமன் விலகி செல்வதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறினார். இந்த நிலையில் தமிழக எம்எல்ஏவான ஆளுர் ஷாநிவாஸ் அக்கா மகன் தான் அசீம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு ஆளூர் ஷாநிவாஸ் பதில் பதில் அளித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறிய போது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அசீம்m எங்கள் ஊர்க்காரர், அதே நேரத்தில் எனக்கு மிகவும் தெரிந்தவர், தூரத்து சொந்தமும் கூட ,ஆனால் அவர் கூறியது போல் அவர் என்னுடைய அக்கா மகன் கிடையாது. அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு அக்காவே இல்லை, ஒரு தங்கை மட்டுமே இருக்கிறார், அப்படி இருக்கும்போது அவர் எப்படி என்னுடைய அக்கா மகனாக இருக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் விக்ரமன் குறித்து ஆளூர் ஷாநிவாஸ் கூறிய போது' இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை, அவ்வப்போது வெளியாகும் கிளிப்பிங் மட்டுமே பார்ப்பேன், விக்ரமன் என்னுடைய கட்சிக்காரர், நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘ கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம், கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம் என்ற தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க’ என்று பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்ரமன் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
"கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம்; கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்!" என்ற தலைவர் @thirumaofficial வரிகளுக்கு ஏற்ப, கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் @RVikraman வெல்க! #Vikraman #WinnerVikaraman #VCK #விசிக pic.twitter.com/sVNW1ENzTk
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) January 18, 2023
Aloor Shanavas about #Azeem & #Vikraman𓃵
— Ahamed Inshaf (@InshafInzz) January 20, 2023
Watch properly, Azeem ku sonnadhuku opposite ah solli irukaru. #BiggBossTamil6 #BiggBossTamil#AramVellum #AramVellumதமிழ்நாடு#WinnerVikaraman #WinnerVikraman#Vikraman #VikramanTitleWinner #VaathiVikramanpic.twitter.com/YJx5moW6wX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com