தமிழகம்- இந்தியில் தேர்தல் பிரச்சாரம் தேவையா? உண்மையை உடைக்கும் பரபரப்பு வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,March 30 2021]
இந்தியாவில் மாநில மொழிகளுக்கான தனித்தன்மையைக் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் வானதி சீனிவாசன் அவர்கள் இந்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததைப் போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு இந்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறதா? அல்லது இந்தி வாக்காளர்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டார்களா? எனப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தேசிய கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை ஏன் இந்தியில் வைக்க ஆசை படுகின்றன? இதன் பின்னால் ஒளிந்து இருக்கும் அரசியல் பின்னணி என்ன? உண்மையில் தமிழகத்திற்கு இதுபோன்ற ஒரு மாற்றம் தேவையா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி அரசியல் விமர்சகர் திரு. அய்யாநாதன் அவர்கள் நமக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்து இருக்கும் இந்நிலையில் மொழி குறித்த விவாதமும் தற்போது எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் விஷ்வரூபம் எடுத்து இருக்கும் தேசிய கட்சிகள் என்ன மாற்றங்களைக் கொடுக்க போகிறது, இதனால் மாநில சுயாட்சி பாதிக்கப்படுமா? என்பது போன்ற நிலைப்பாடுகளை இந்த வீடியோ நமக்கு விளக்கி காட்டுகிறது. மேலும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அய்யாநாதன் அளித்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக் கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.