டெல்லியை அடுத்து சென்னை: ஒருமாத போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கடைசி வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை திரும்பிய விவசாயிகள் இன்று முதல் ஒரு மாத போராட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளனர்.
இன்றைய முதல் நாளில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் குழு தொடர்ந்து டெல்லியை போலவே வித்தியாசமான முறையில் தினமும் போராட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் ஜூலை 10ஆம் தேதி வரை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து அய்யாக்க்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியபோது, 'வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.
விவசாயிகளின் கருகிய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு தற்போது வாழ்வதா அல்லது சாவதா என்று தெரியவில்லை.
தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்தால் விவசாயிகளை அடிமைகள் போல நடத்துகிறார்கள். டெல்லியில் நாங்கள் 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் ஆளும் மத்திய அரசோ எங்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. டெல்லியில் நிர்வாணமாக ஓடிவிட்டோம், இங்கேயும் நிர்வாணமாக ஓட விட வேண்டாம். இனி வாழ்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout