'ஜோக்கர்' பட பாணியில் நூதன போராட்டம்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கிய தேசிய விருது பெற்ற திரைப்படமான 'ஜோக்கர்' பட பாணியில்  தென்னக நதிகள் இணைப்பு தலைவர்அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி மற்றும் தமிழகத்தில் நூதனமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருவது தெரிந்ததே

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குமரி முதல் கோட்டை வரை பயணம் மேற்கொண்டு வரும் அய்யாக்கண்ணு இன்று சேலம் வந்தார். இந்த நிலையில் சேலத்தில் உள்ள ஆங்கிலேயர் கால கல்லறைக்கு சென்ற அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கல்லறையின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து எந்த பயனும் இல்லாததால் தற்போது கல்லறைகளில் உள்ள ஆவிகளிடம் எங்களது கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். இதேபோன்ற ஒரு காட்சி 'ஜோக்கர்' படத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்று அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்காவுக்கு செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவரை துக்ளக் ஆசிரியரும், பாஜக பிரமுகருமான குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார்.

நெட்டிசன்கள் கலாய்க்க போட்டோ கொடுத்து உதவிய நடிகை கஸ்தூரி

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் பயன்படுத்திய திட்டம் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'மாரி 2' படத்தின் புதிய அப்டேட்

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் பாலாஜிமோகன் இயக்கத்தில் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

26 வயது பெண்ணை மணந்த பின் டான்ஸ் ஆடிய நடிகர்

தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் மிலிந்த் சோமன்.

நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.