'ஜோக்கர்' பட பாணியில் நூதன போராட்டம்
- IndiaGlitz, [Monday,April 23 2018]
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கிய தேசிய விருது பெற்ற திரைப்படமான 'ஜோக்கர்' பட பாணியில் தென்னக நதிகள் இணைப்பு தலைவர்அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி மற்றும் தமிழகத்தில் நூதனமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குமரி முதல் கோட்டை வரை பயணம் மேற்கொண்டு வரும் அய்யாக்கண்ணு இன்று சேலம் வந்தார். இந்த நிலையில் சேலத்தில் உள்ள ஆங்கிலேயர் கால கல்லறைக்கு சென்ற அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கல்லறையின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து எந்த பயனும் இல்லாததால் தற்போது கல்லறைகளில் உள்ள ஆவிகளிடம் எங்களது கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். இதேபோன்ற ஒரு காட்சி 'ஜோக்கர்' படத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது