தாமரை விதைகள் உடலுக்கு அவ்வளவு நல்லதா? மருத்துவப் பயன் குறித்த தொகுப்பு

  • IndiaGlitz, [Monday,June 12 2023]

மக்கானா எனப்படும் தாமரை விதைகள் சீனாவிலும் ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தி வரும் நிலையில் சமீபகாலமாக இந்தியர்களிடமும் இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதுவும் வொர்க் அவுட் மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்தத் தமாரை விதைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தாமரை விதைகளிலுள்ள சத்துகள், மருத்துவப் பயன்கள், பக்க விளைவுகள் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.

கிட்டத்தட்ட 7,000 வருடங்களாக உணவுப்பொருளாகவும் காய்கறி பொருளாகவும் இந்தத் தாமரை விதைகள் இருந்து வருகிறது. விதைகளைத் தவிர அதன் தண்டுகளும் மருத்துவ குணம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தாமரை விதைகளில் வெள்ளைத் தோல் மற்றும் பழுப்பு நிறம் என இருவகைகள் காணப்படுகின்றன.

இந்தத் தாமரை விதைகளைத் தற்போது இந்தியாவில் பாப்கார்ன், அரிசிப் பொரி போன்று வறுத்தே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

100 கிராம் தாமரை விதையில் 388 கலோரிகள் காணப்படுகின்றன. அதேபோல கால்சியம் 313 மி.கி, சோடியம் 7.86 மி.கி, பொட்டாசியம் 49.5 மி.கி, செம்பு 2.52 மி.கி, வெளிமம் 43.9 மி.கி, இரும்பு 16.4 மி.கி, செலினியம் 1.04 மி.கி, மாங்கனீசு 16.6 மி.கி போன்றவை காணப்படுகின்றன.

மேலும் ஈரம் 8-10%, கச்சா கொழுப்பு 3.7%, புரதம் 25%, நார்சத்து 3-4%, கார்போஹைட்ரேட் 65% ஆகியவையும் அடங்கியுள்ளது.

இதனால் தாமரை விதையானது குறைவான கலோரியோடு ஏராளமான ஊட்டச்சத்துள்ள மிகச்சிறந்த உணவுப்பொருளாக மதிக்கப்படுகிறது. இதனால்தான் வொர்க்அவுட் பயிற்சி மேற்கொள்ளும் நபர்களும் இதை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்த தாமரை விதைகளில் அதிக புரதம், ஆரோக்கியமான கொழுப்பும் அடங்கியிருக்கிறது. இதைத்தவிர சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.

தாமரை விதைகள் பெரும்பாலும் விரத நாட்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு உணவாக இருந்துவருகிறது. காரணம் பசியை கட்டுப்படுத்தும் சக்தி இதில் காணப்படுகிறது.

தாமரை விதைகளில் ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் வலியைப் போக்க உதவுகின்றன என்று 2009 ஆய்வு நிரூபித்து காட்டியிருக்கிறது.

உடலில் கொழுப்பு செல்களான அடிபோசைட்டுகள் உருவாவதை இந்தத் தாமரை விதைகள் தடுக்கிறது. இதனால் கொழுப்பு திசுக்களின் எடையைக் குறைக்கும் ஆற்றலுடன் தாமரை விதைகள் சிறந்த வினை புரிகிறது.

அல்சைமர் நோய் எனப்படும் நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க இந்த தாமரை விதைகள் பயன்படுகிறது. அதாவது நரம்பு செல் சேதத்தை குறைக்கவும் புரோந்தோசயடின்கள் எனப்படும் மூளை முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டை குறைக்கவும் இது உதவுவதாக 2014 ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதைத்தவிர இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

இந்தத் தாமரை விதைகளைப் பயன்படுத்தும்போது ஒரு சிலருக்கே ஒவ்வாமை ஏற்படுகிறது. அதுவும் அரித்மியா போன்ற இதய நோய் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் தாமரை விதைகளைச் சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காரணம் இந்த விதைகள் அதிக வெப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டவை.

தாமரை விதைகளை அசிரிப்பொரி அல்லது பாப்கார்ன் மாதிரி வறுத்து சாப்பிடலாம். அல்லது பன்னீர் பட்டர் மசாலா மாதிரி கிரீமி தாமரைபொரி கறியாகவும் சமைத்துச் சாப்பிடலாம்.

பாரம்பரிய மிக்க இந்த தாமரை விதைகளை நாமும் பயன்படுத்தி குறைந்த கலோரியோடு அதிக ஆற்றலை பெறுவோம்.

More News

பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது? சூர்யா ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது

இளம் பெண்களுடன் விஜய் டிவி ரக்சன் .. இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!

விஜய் டிவி ரக்சன் இளம்பெண்கள் உடன் இலங்கை கடற்கரையில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அடிக்கிற வெயிலுக்கு இந்த டிரஸ் தான் சரி.. பிகினியில் எமி ஜாக்சனின் செம்ம புகைப்படம்..!

 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை

அந்தமானில் குக் வித் கோமாளி நடிகை.. டூபீஸ் நீச்சலுடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் டூபீஸ் நீச்சல் உடையில் அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில்