மகன்கள் கையால் ஊழியர்களுக்கு ஆயுதபூஜை பரிசுப்பொருட்கள்.. நயனின் க்யூட் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,October 13 2024]

நடிகை நயன்தாரா தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தன்னுடைய மகன்கள் கையால் ஆயுத பூஜை பரிசு பொருட்கள் வழங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை தினத்தன்று பிரபலங்கள் தங்களிடம் பணி செய்யும் ஊழியர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசுகள் வழங்குவதுண்டு. சிலர் போனஸ் பணமும் வழங்குவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவர், செக்யூரிட்டி மற்றும் வேலையாட்கள் ஆகியோர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசினை வழங்கினார். இந்த சிறப்பு பரிசுகளை தங்களுடைய மகன்கள் கையில் கொடுத்து ஊழியர்களுடன் வழங்கிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக தனது ஆயுதபூஜை வாழ்த்தில் ’நல்லது எப்போதுமே தீமையை வெல்ல வேண்டும், விஜயதசமியான இந்த புனித நாளில் துர்க்கை அம்மன் அனைவரும் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை தருவார். இந்த சிறப்பான நாளில் அனைத்து பிரச்சனைகளும் மறைந்து வாழ்க்கையில் எல்லா துறையிலும் வெற்றி பெற எனது தரப்பில் இருந்து விஜயதசமி வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார். இந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

பத்த வச்சிட்டியே பரட்ட.. பவித்ராவை எல்லோர் முன்னிலையில் போட்டு கொடுத்த விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ஒருவரை பற்றி பேசும்போது பூசி மெழுகாமல், மறைமுகமாக கூறாமல் நேரடியாக முகத்துக்கு நேரில் அவருடைய தவறை கேள்வி கேட்கும்

உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்.. 'கோட்' வசூலை மிஞ்சிய லேட்டஸ்ட் ரிலீஸ் படம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த படம் உலகம் முழுவதும் 455 கோடி

வீக் போட்டியாளர்கள்.. சாச்சனாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வேற லெவல் புரமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் நாளே செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக

ஒரு மாதத்திற்கு பின் 'கோட்' வெற்றி விழா கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து படக்குழுவினர் வெற்றியை

இதுதான் முதலும் கடைசியும்.. சாச்சனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா மீண்டும்  என்ட்ரி   ஆகியுள்ள நிலையில் அவருக்கு பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கையும்