கங்கனா ரனாவத் படத்தை இயக்குகிறேனா? 'அயோத்தி' இயக்குனர் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மந்திரமூர்த்தி. இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை இயக்குனர் மந்திரமூர்த்தி மறுத்துள்ளார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நான் இயக்க இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் கங்கனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் எனது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மாதவன், கங்கனா நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Hi everyone,
— Manthira Moorthy (@dir_Mmoorthy) June 6, 2023
My next project is also @Tridentartsoffc
But im not directing the project starring kangana Ranaut.
Very soon we will announce our next project
Thank you 🙏
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments