கங்கனா ரனாவத் படத்தை இயக்குகிறேனா? 'அயோத்தி' இயக்குனர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Thursday,June 08 2023]

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மந்திரமூர்த்தி. இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை இயக்குனர் மந்திரமூர்த்தி மறுத்துள்ளார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நான் இயக்க இருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் கங்கனா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் எனது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மாதவன், கங்கனா நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்திற்கு அலைஅலையாய் திரண்ட அயல் தேச ரசிகர்கள்

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள்

ராமர் கேரக்டரில் நடித்த பிரபாஸுக்கு நன்றி: பிரபல தமிழ் திரையுலக பிரபலம் ட்வீட்..!

பிரபாஸ் ராமர் கேரக்டரில் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக

விஜய் பிறந்த நாளில் 'லியோ', 'தளபதி 68' அப்டேட்.. டபுள் விருந்துக்கு தயாரா?

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் 'லியோ' படத்தின் அப்டேட் மற்றும் 'தளபதி 68' படத்தின் அப்டேட் என இரண்டு விருந்துகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக

ரஜினியிடம் இருந்து கிடைத்த மறக்க முடியாத பரிசு.. தமன்னா நெகிழ்ச்சி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முதல் முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்த தமன்னா,

புல்வெளி தரையில் ப்ளூ நிற நீச்சல் உடை… வேறலெவல் கிளாமரில் நடிகை ரைசா வில்சன்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது யாதார்த்தமான கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் ரைசா வில்சன்