அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்க தொடங்கிய நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி செய்தும் உத்தரவிட்டுள்ளது
மேலும் இந்த தீர்ப்பில் 1857ஆம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லீம் அமைப்புகள் தவறி விட்டதாகவும், நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது என்றும், ஆங்கிலேயர் வருகைக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு இருந்துள்ளது என்பது பயணக்குறிப்புகள் தெரிவிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராமர் பிறந்த மண் அயோத்தி என இந்துக்கள் நம்புவதாகவும், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது என்றும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதை, காலம் காலமாக தொடரும் வழிபாடு நிரூபிக்கிறது என்றும், எனவே அயோத்தி இந்துக்களுக்கே சொந்தமானது என்றும், சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கே வழங்கவும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி செய்து உத்தரவிடுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments