இது பெரிய அயோக்கியத்தனம்: 'அயோக்யா' படம் குறித்து பார்த்திபன் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது. ஜூனியர் என்.டி.ஆரின் 'டெம்பர்' ரீமேக்காக இருந்தாலும் இயக்குனர் வெங்கட்மோகன் தனது சொந்தச்சரக்கையும், தற்கால நிகழ்வுகளையும் கலந்து திரைக்கதை அமைத்துள்ளதால் 'டெம்பர்' படம் பார்த்தவர்களும் இந்த படம் ஒரு புதிய படம் போல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், 'அயோக்யா' திரைப்படம் தன்னுடைய 'உள்ளே வெளியே' படத்தின் காப்பி என்றும், இதுவொரு அயோக்கியத்தனம் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டி Temper' (Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு 'அ-தனம்'? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்' என்று கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவுக்கு பல பாசிட்டிவ் கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.
'அயோக்கியா'த்த்தனம்!
— R.Parthiban (@rparthiepan) May 12, 2019
94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன pic.twitter.com/PVgQYEkxGY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com