'அயலான்' இயக்குனருக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 01 2024]

தமிழ் திரை உலகில் இரண்டே படங்கள் இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ரவிக்குமாருக்கு விலைமதிப்பில்லா பரிசு கிடைத்ததை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கடந்த 2015 ஆம் ஆண்டு ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது.

அதன் பின்னர் அவரது இயக்கத்தில் உருவான ’அயலான்’ திரைப்படம் 9 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் வெளியானது என்பதும் இந்த படமும் சுமாரான வெற்றியை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ரவிக்குமாருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் ரவிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் பிரியா கணேசன் கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் ரவிகுமார் மகிழ்ச்சியுடன் அறிவித்து, உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

நடிப்பதற்கு டிப்ஸ் வாங்கியது யாரிடம் தெரியுமா? சரத்குமார் முன்னாள் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி, பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாள்: ரஜினி, கமல், விஜய் வாழ்த்து..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

என் மீது குற்றஞ்சாட்டுவதால் நீங்கள் 2 பயன்களை மட்டும் பெற முடியும்: அமீர் வெளியிட்ட வீடியோ

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குனர் அமீரை தொடர்புபடுத்தி ஏராளமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

அதிதி ஷங்கரின் அடுத்த படம்.. ஹீரோ, இயக்குனர் இந்த பிரபலங்களா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் அதன் பின் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' என்ற திரைப்படத்தில்

படப்பிடிப்பில் பாலா என்னை அடித்தாரா? ’வணங்கான்’ நடிகை கூறிய விளக்கம்..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மமிதா  பைஜூ