'அயலான்' பட நடிகை விவாகரத்து.. முடிவுக்கு வந்தது 14 வருட திருமண வாழ்க்கை..!

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

'அயலான்’ படத்தில் நடித்த நடிகை தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் அவருடைய 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அயலான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை இஷா கோபிகர். இவர் ஏற்கனவே விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் அதன் பின்னர் ’என் சுவாச காற்றே’ ’நெஞ்சினிலே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் அதிபர் திம்மி நரங்க் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இருவருக்கும் விவாகரத்து கொடுத்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

14 ஆண்டு கால திருமண வாழ்க்கையை நடிகை இஷா கோபிகர் முடித்துக் கொண்ட தகவல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்திக்கிறார் விஜய்.. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம்..!

சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தனுஷின் 'கேப்டன் மில்லர்' சென்சார் தகவல்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகும்

எலிமினேஷனில் புது ட்விஸ்ட்.. தப்பித்தார் மாயா.. அப்படியென்றால் எவிக்ட் செய்யப்பட்டது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலிமினேஷனில் புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது

சில மூஞ்சிகளை எல்லாம் பார்த்தா வெறுப்பா இருக்குது: விசித்ரா சொல்வது யாரை? தினேஷை அல்ல..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் எலியும் பூனையும் போல ஆரம்பம் முதலே சண்டை போட்டு வருகின்றனர். தினேஷ் குறித்து விசித்ராவும் விசித்ரா குறித்து

என் முதல் படத்துல இருந்த 2 பேரும் இப்ப உயிரோட இல்லை.. விஜயகாந்த் குறித்து நமீதா..!

நடிகை நமீதா தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அந்த படத்தில் தன்னுடன் பணிபுரிந்த இரண்டு பேருமே