ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கி அசுரனில் முடிந்துள்ளது: ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் தனக்கு சிறப்பான ஆண்டுகளாக இருந்ததாகவும் இந்த 10 ஆண்டில் தனக்கு பல வெற்றிப்படங்கள் கிடைத்ததாகவும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
2010ஆம் ஆண்டு ’ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படத்திற்கு தான் இசையமைத்ததாகவும், இந்த படத்திற்கு பின்னர் பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இசையமைத்து தற்போது 2019ஆம் ஆண்டு முடிவில் ’அசுரன்’ படத்துடன் 10 ஆண்டுகளை முடித்துள்ளதாகவும், இந்த 10 ஆண்டுகளில் தன்னுடைய பணி மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அவரது ரசிகர்கள் 2020 ஆம் ஆண்டில் ’சூரரைப்போற்று’ படத்திலிருந்து உங்களுடைய அடுத்த சாதனை தொடர உள்ளது என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, தலைவா, ராஜா ராணி, டார்லிங், கொம்பன், காக்கா முட்டை, விசாரணை, தெறி, உள்பட பல வெற்றிப்படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
What a decade this has been ... started with 2010 Jan #aayirathiloruvan and ended with 2019 #asuran ... ❤️?? #aayirathiloruvan - #asuran
— G.V.Prakash Kumar (@gvprakash) December 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments