ஜனவரி 26ல் வெளியாகும் தமிழ் வெப்தொடர்: ZEE5 அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் அடுத்த தமிழ் அசல் தொடரான ‘அயலி’ யின் வெளியீட்டை இன்று அறிவித்தது. ZEE5 கடந்த ஆண்டில் விலங்கு, ஃபிங்கர்டிப், எஸ்2 மற்றும் பேப்பர் ராக்கெட் ஆகியவற்றின் வியக்கத்தக்க மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டுக்கான தனது முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான அயலியின் அறிமுகத்தோடு புதிய ஆண்டை அதிரடியாக கோலாகலமாகத் தொடங்குகிறது.
எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் உருவான, 8 எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் இது ZEE5 இல் 26 ஜனவரி 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
மருத்துவராக வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற ஒரு பதின்மவயது சிறுமியைப் பற்றிய உணர்ச்சி மிகுந்த சமூக நாடகம் அயலி. ஆனால் அவள் வாழ்ந்து வந்த வீரப்பன்னை கிராமம் பருவமெய்தியவுடன் பெண்குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருந்தது.
இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால், கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நம்பிக்கை. கற்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அந்த இளம் சிறுமி போராடுகிறார். இருப்பினும், வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் அவர் வெற்றி பெறுவாரா?
ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டது போல், அயலி திரைப்படமானது பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை தகர்தெறிய புறப்படும் தமிழ் செல்வி என்ற வயதுக்கு வந்த மன உறுதி கூர்மையான அறிவு மற்றும் சுதந்திர மனப்பான்மை கொண்ட இளம் பெண்ணின் கதையாகும். அயலியில் முக்கிய கதா பாத்திரத்தில் தோன்றும் நடிகர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் விருந்தினர் பாத்திரத்தில் தோன்றியுள்ளார்கள். ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் , ஒரு சமூகச்செய்தியோடு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவான அயலி ஜனவரி 26 அன்று ZEE5 இல் திரையிடப்பட உள்ளது.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா, கூறினார் “கடந்த ஆண்டு விலங்கு, ஃபிங்கர் டிப் மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற எங்களின் தமிழ் அசல் திரைப்படங்களுக்குக் கிடைத்த வியக்கத்தக்க மாபெரும் வெற்றிகரமான வரவேற்பிற்குப் பிறகு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வழக்கத்திற்கு மாறான கதைக்களத்தைக் கொண்ட மற்றொரு தொடரான அயலியை நாங்கள் வெளியிட உள்ளோம். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய சமூக செய்தியுடன் கூடிய உருவாக்கங்கள் கல்வி அறிவு, மற்றும் தகவல்களை வழங்கி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது என்று ZEE5 இல் உள்ள நாங்கள் நம்புகிறோம். அதைத்தான் அயலியும் செய்ய இருக்கிறது பழங்கால பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்தும் ஓடும் ஒரு இளம் பெண்ணின் இந்தக்கதையானது கனவுகளைச் சுமந்து கொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும் பல பெண்களின் நம்பிக்கைக்கு தூண்டுகோலாக அமைந்து அவர்களையும் அதை நோக்கிச் செலுத்தும் என்பது உறுதி” .
கிரியேட்டிவ் தயாரிப்பாளரான குஷ்மாவதி கூறுகையில், "பொழுதுபோக்கு துறையில் பெண்களை மையமாகக் கதைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த கதைகளை நேர்மையாகவும் பயன்தரத்தக்கதாகவும் முன்னிலைப்படுத்த நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை கண்டறிந்து அதை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஒரு முழுமையான நீதியை அளிப்பதே ஒரு தயாரிப்பாளராக எனது நோக்கம். - அயலி ஐ தயாரிப்பதிலும் எனது முயற்சி அதை நோக்கியே இருந்தது” .என்று தெரிவித்தார்
இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில் கூறினார், “இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வெற்றிகரமாக மாற்றியமைக்கக் கூடிய கதைகளை முன்வைக்கின்றன, மேலும் ஒரு பிரச்சாரமாக தோன்றாத வகையில் அந்த மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் எங்கள் உண்மையான முயற்சிதான் அயாலி. இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றான இந்தக் கதையை காட்சிப்படுத்த எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கிய ZEE5 க்கு நாங்கள் நன்றிபாராட்டுகிறோம்” .
ZEE5 இல் ஜனவரி 26 முதல் பிரத்தியேகமாக ‘அயலி’ ஐ கண்டு களிக்கத் தயாராகுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments