'அயலான்' டிரைலர் ரிலீஸ் விழா வெளிநாட்டில் நடைபெறுகிறதா? எந்த நாட்டில்?

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த விழா வரும் 26 ஆம் தேதி இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக துபாயில் தமிழ் திரைப்படங்களின் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் ’அயலான்’ படத்தின் டிரைலர் விழா துபாயில் ஜனவரி 7ஆம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.