தயார் நிலையில் 'அயலான்' டீசர்.. ரிலீசுக்கு பின் எதிர்பார்ப்பு எகிறுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என மாற்றி அறிவிக்கப்பட்டது என்பதையும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த டீசரை பார்த்த படக்குழுவினர்களில் சிலர் தெரிவித்த போது டீசர் வேற லெவலில் இருப்பதாகவும் டீசர் ரிலீஸ்க்கு பின்னர் விண்ணை முட்டும் அளவுக்கு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளனர்
ஏற்கனவே இந்த படத்திற்கு உலக அளவில் மிக பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் டீசர் ரிலீஸ்க்கு பின்னர் இந்த படத்தை வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com