தயார்  நிலையில் 'அயலான்' டீசர்.. ரிலீசுக்கு பின் எதிர்பார்ப்பு எகிறுமா?

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என மாற்றி அறிவிக்கப்பட்டது என்பதையும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் டீசர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த டீசரை பார்த்த படக்குழுவினர்களில் சிலர் தெரிவித்த போது டீசர் வேற லெவலில் இருப்பதாகவும் டீசர் ரிலீஸ்க்கு பின்னர் விண்ணை முட்டும் அளவுக்கு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளனர்

ஏற்கனவே இந்த படத்திற்கு உலக அளவில் மிக பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் டீசர் ரிலீஸ்க்கு பின்னர் இந்த படத்தை வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

More News

என்ன ஒரு அழகு... உயிர்-உலகு  பிறந்த நாளை கொண்டாடும் விக்கி-நயன் வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில்

'சிம்பு 48' படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா? வேற லெவல் பின்னணி இசை உறுதி..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிம்பு 48' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக

'லியோ' இசை வெளியீட்டு விழா திடீர் ரத்து.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக

குடும்பத்துடன் ரிஷிகேஷ் சென்ற 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்.. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்று ரிஷிகேஷ் உள்பட பல இடங்களில் தியானம் செய்த நிலையில் அவரை அடுத்து தமிழ் நடிகைகள் சிலரும் இமயமலை சென்றனர் என்பதை பார்த்தோம். 

ஜிவி பிரகாஷின் பட இயக்குனருக்கு திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷான் நடிப்பில் உருவான 'அடியே' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள்