'அயலான்' தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் ஒரு பக்கம் ரூ.75 கோடிக்கு மேல் வசூலை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’அயலான்’ தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அவர்களுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு என்ன சிகிச்சை என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு மருத்துவமனை மருத்துவர்களால் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரை உலகின் பல வெற்றி படங்களை தயாரித்த கேஜிஆர் ராஜேஷ் சமீபத்தில் ’அயலான்’ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் அவர் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments