close
Choose your channels

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த 'அயலான்' படக்குழு.. நீதிமன்ற உத்தரவு என்ன ஆச்சு?

Sunday, December 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் வைபவ் நடித்த ’ஆலம்பனா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை வெளியிட தடை என சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த ‘அயலான்’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? அதற்குள் இந்த படத்தின் பிரச்சனையை பேசி தீர்க்கப்படுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘அயலான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ‘அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படம் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என்று உறுதி செய்துள்ளது. இந்த பதிவை அடுத்து ‘அயலான்’ படத்தின் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று பொங்கல் தினத்தில் ‘அயலான்’ ரிலீஸ் செய்யப்படும் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment