அயலான் ரிலீஸ்? படக்குழு வெளியிட்ட தெறிக்கவிடும் அப்டேட்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

“இன்று நேற்று நாளை“ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இந்தப் படத்தில் நடிகர் சிவக்கார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இதனால் இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இவருக்கு ஜோடியாக இளம் நடிகை ரகுல்ப்ரீதி சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களைத் தவிர கருணாகரன், யோகிபாபு போன்ற நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் இப்படத்திற்கான இசையை அமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின் விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது. இதனால கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பில் தீவிரம் காட்டப்பட்டதை அடுத்து தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகப் படக்குழு தெரிவித்து இருக்கிறது. ஆனால் படத்திற்கான கிராஃபிக்ஸ் வேலைகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

சையின்ஸ் பிக்ஷனாக எடுக்கப்பட்டு உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து உள்ளது. அதனால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள கேக்கில் ஏலியன் இருப்பதோடு அந்த ஏலியன் கையில் லாலி பாப் வைத்து இருக்கிறது. மேலும் அதில் அயலான் Shoot wrapup என டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் #Ayalaan என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாக்கி வருகின்றனர். மேலும் படம் வரும் கிறிஸ்துமஸ்க்கு ரிலீசாகும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.