சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டிலில் செம டுவிஸ்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கி வரும் படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’அயலான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படம் வேற்று கிரகத்து மனிதர்கள் குறித்த படமாக இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் இந்த படத்தை வேற்றுகிரக மனிதராக நடித்து இருப்பதாகவும் இதன் காரணமாகவே இந்த படத்திற்கு ’அயலான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது பெரும் ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.
24ஏம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைக்க உள்ளார். இந்தப் படம் இதுவரை தமிழில் வெளிவராத வித்தியாசமான கதை என்றும் இப்படி ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்குனர் ரவிகுமார் இயக்கியிருப்பதாகவும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
’அயலான்’ என்ற டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த டைட்டில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#Ayalaan it is! We're making something unseen in Tamil cinema, a very interesting Sci-fi film directed by Indru Netru Naalai fame @Ravikumar_dir starring @Siva_Kartikeyan with music by 'Isai Puyal' @arrahman ?? Here's the title look! What do you think? pic.twitter.com/dnTEFOcaHH
— KJR Studios (@kjr_studios) February 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments