இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

கடந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியான நிலையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிப்ரவரி 9ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த பொங்கல் விருந்தாக வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

’அயலான்’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில், ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல் ’இப்படிக்கு காதல்’ என்ற தமிழ் திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவான ’குண்டூர் காரம்’ என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. ஆஹா ஓடிடியில் ’பபுள்கம்’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது.

இந்த வாரம் ’அயலான்’, ’கேப்டன் மில்லர்’ உள்பட 3 தமிழ் படங்களும் குண்டூர் காரம் உட்பட சில தெலுங்கு படங்களும் வெளியாக இருப்பதை அடுத்து, ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கிறது காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.