close
Choose your channels

2 மாநிலங்களில் மட்டும் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' ரிலீஸ் இல்லையா? என்ன காரணம்?

Sunday, December 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான இரண்டு மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் இல்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் ’அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பொங்கல் தினத்தில் மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மற்றும் பிரசாந்த் வர்மா ஆகிய ஐந்து பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளதை அடுத்து ’அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றும் எனவே பொங்கல் கழித்து இரண்டு வாரங்கள் கழித்து தான் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த இரண்டு படங்களும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment